×

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்ன: ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குப்புராஜ், ஜெகதீஸ்வரன், சௌத்ரி ஆகிய மூவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்ததற்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகுறிப்பில்:
ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வெங்கம்பூர்-அ கிராமம் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் இன்று (3-8-2023) காலை கோவில் திருவிழாவிற்காக தீர்த்தம் எடுக்கச் சென்ற, கொடுமுடி, தட்டாம்பாளையம், கொண்டலாம்புதூர் பகுதியைச் சேர்ந்த குப்புராஜ், த/பெ.கோபி (வயது19), ஜெகதீஸ்வரன், த/பெ.சிவகுமார் (வயது 18) மற்றும் சௌத்ரி, த/பெ.கோபி (வயது 14) ஆகிய மூவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த இளைஞர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

The post காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : river Kaviri ,CM ,G.K. Stalin ,SENNA ,Kaviri ,Erode district ,Chief Minister ,Dinakaran ,
× RELATED கோவை மாக்கினாம்பட்டியில் 8 செ.மீ. மழை பதிவு